கிளிநொச்சி காவல்நிலையத்தில் 28 அதிகாரிகளுக்கு கொவிட்!

Friday, 07 May 2021 - 15:45

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+28+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%21
கிளிநொச்சி காவல்நிலையத்தில் சேவையாற்றும் 28 காவல்துறை அதிகாரிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் இதனை தெரிவித்தார்.

தற்போது கிளிநொச்சி காவல்நிலையத்தில் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வேறு காவல்துறை அதிகாரிகள் ஊடாக சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் என் சரவணபவன் தெரிவித்தார்.