கொவிட் சிகிச்சை மையமாக மாறிய கிறிஸ்தவ தேவாலயம் (படங்கள்)

Sunday, 09 May 2021 - 10:55

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அங்கு ஒக்சிஜன் தேவை பெருகி வருகிறது.

இதனால் பல இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் ஒக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதால் வைத்தியசாலைகளில் படுக்கைகளுக்கு பற்றாகுறை ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு அதிகமான படுக்கை வசதிகளை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் பிரதேசத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை மையத்தில் 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், அதில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் காணப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

No description available.

No description available.