கொரோனா பரவும் புதிய முறை தொடர்பில் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் வெளிப்படுத்தல்

Sunday, 09 May 2021 - 15:13

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
காற்று மூலம் கொவிட் 19 மக்களிடையே பரவுவதாகவும், இதனால் தொற்றாளரிலிருந்து 6 அடி தூரத்தில் இருக்கும் நபர்களுக்கும்  கொவிட் தொற்று ஏற்படக்கூயடி சாத்தியம் காணப்படுவதாகவும் சி.டி.சி எனும் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பிரித்தானியாவின் லென்செட் மருத்துவ சஞ்சிகையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

கொவிட் தொற்றுறுதியான நபர் ஒருவர் வெளிசுவாசிக்கும் போது காற்றுடன் கலக்கும் நுண்ணிய நீர்துளிகள் ஊடாக மூன்று முதல் ஆறு அடி தூரத்தில் உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், தொற்றுறுதியான நபர் இருக்கும் இடத்தில் உள்ள காற்றில் சில மணிநேரம் இந்த வைரஸ் தங்கியிருக்கும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தனிநபர்களிடையே சமூக இடைவெளியை பேணல், முகக்கவசம் அணிதல், போதுமான காற்றோட்டத்தை பேணல் போன்றவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும் என சி.டி.சி தெரிவித்துள்ளது.