பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்! (காணொளி)

Sunday, 09 May 2021 - 17:22

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை நாட்டின் பிரதான வைத்திய நிபுணர்கள், கல்வியியல் நிபுணர்கள் உள்ளிட்ட தரப்பினருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ள அதேவேளை, பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என்பவற்றை ஆரம்பிப்பது தொடர்பில் ஆலோசனைகளையும் பெற எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, பாடசாலை உள்ளிட்ட கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.