இஸ்ரேலிய காவல்துறையினருடன் ஏற்பட்ட மற்றொரு மோதலில் 90 பாலஸ்தீனியர்கள் காயம்!

Sunday, 09 May 2021 - 19:27

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+90+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
பாலஸ்தீனிய மக்களுக்கும் இஸ்ரேலிய காவல்துறையினருக்கும் இடையேயான மோதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக இடம்பெற்ற மோதல்களில் 90 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலிய காவல்துறை அதிகாரி ஒருவர் மட்டுமே காயமடைந்துள்ளார்.

பழைய நகரத்தில் உள்ள டமஸ்கஸ் காவல் நிலையத்தை நோக்கி பாலஸ்தீனியர்கள் தொடர்ச்சியாக கல்வீச்சில் ஈடுபட்டதை அடுத்து காவல்துறையினர் ரபர் தோட்டா பிரயோகம் மற்றும் நீர்பாச்சியடித்துள்ளதாக பாலஸ்தீனிய தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்றி விட்டு அந்த இடத்தில் யூதர்களை குடியேற்றவுள்ளதாக நேற்று முன்தினம் செய்திகள் வெளியான நிலையில், பரஸ்பரம் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றது.

இஸ்ரேலிய காவல்துறையினர் அன்று மேற்கொண்ட தாக்குதலில் 200 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன், இஸ்ரேலிய காவல்துறையினர் 17 பேர் காயமடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் இன்றும் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இன்றைய தாக்குதல்கள் ஜெரூசலத்தில் உள்ள அல்-அக்குசா பள்ளிவாசல் அமைந்துள்ள வளாகத்தில் இடம்பெற்றுள்ளன. பல வருடங்களுக்கு பிறகு மிகவும் மோசமான முறையில் இன்றைய தாக்குதல் அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனியர்கள் எறிகணை தாக்குதலையும் மேற்கொண்டதாக இஸ்ரேலிய காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அதேவேளை, கட்டாரில் நடைபெறும் மத்திய கிழக்கு சமாதான பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்த அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் காசா பள்ளத்தாக்கில் இடம்பெறும் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய மோதல்கள் குறித்து தமது கவலையினை வெளிப்படுத்தியுள்ளனர்.