இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் நேற்று 42 பேர் பலி!

Monday, 17 May 2021 - 7:36

%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+42+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
காசாவில் ஹமாஸூக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை 'முழு பலத்துடன்' தொடரும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ தெரிவித்துள்ளார்.

தேவையான அளவு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அமைதியை மீட்டெடுக்க மேலும் காலம் எடுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 16 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் உள்ளிட்ட மேலும் 42 பேர் கொல்லப்பட்டதாக காசா நேற்று அறிவித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை முதல் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் கொல்லப்பட்டனர்.

எவ்வாறாயினும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 55 சிறுவர்கள் உள்ளிட்ட 188 பேர் மரணித்தனர்.

அத்துடன் 1,230 பேர் காயமடைந்துள்ளனர்

இதற்கிடையில் இந்த விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அவசர கூட்டமொன்றை நடத்தியுள்ளது.

சர்வதேச தரப்பினர் இந்த மோதலை நிறைவுக்கு கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றனர்.

அத்துடன் அங்கு வன்முறை முழுமையாக அதிகரித்து விட்டதென கூறியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரெஸ், இந்த மோதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.