நடமாட்டத் தடை தளர்த்தப்பட்டது - எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மக்கள் செயற்பட வேண்டிய விதம்

Monday, 17 May 2021 - 7:56

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+31+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
நாடு முழுவதும் 3 நாட்களாக அமுலில் இருந்த நடமாட்டத்தடை இன்று (17) அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இன்று (17) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நாளாந்தம் இரவு 11 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை நடமாட்டத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, இன்று (17) முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 1, 3, 5, 7, 9 என்ற ஒற்றை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள் இன்று, நாளை மறுதினம் மற்றும் எதிர்வரும் 21, 23, 25, 27, 29, 31 ஆகிய திகதிகளில் வெளியில் செல்ல முடியும்.

அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் 2, 4, 6, 8, பூச்சியம் என்ற இரட்டை எண்ணாக கொண்டிருக்கும் நபர்கள் நாளை மற்றும் எதிர்வரும் 20, 22, 24, 26, 28, 30 ஆகிய இரட்டை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும்.

இந்த முறைமையை மீறுகின்றவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலுக்கு செல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.

அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக அடையாள அட்டை முறைமையை பின்பற்ற வேண்டும் என காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று முதல் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியில் செல்வோர், கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தினால், அவற்றில் உள்ள தேசிய அடையாள அட்டை இலக்க முறைமையை பயன்படுத்த வேண்டும்.

இதனைதவிர, கடவுச்சீட்டு, சாரதி பத்திர இலக்கங்கள் அடிப்படையில் வெளியே செல்லக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.