இந்தியாவில் அதிகரிக்கும் குணமடைவோர் எண்ணிக்கை

Monday, 17 May 2021 - 11:28

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 ஆம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக தற்போது புதிய தொற்று குறைந்து வருவதோடு குணமடையும் விகிதமும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 281,386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,174,076 ஆக உயர்ந்துள்ளது. எனினும் மொத்த பாதிப்பு 24,965,463 ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 4,106 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 274,390 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 378,741 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 1.10 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 84.81 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 3,516,997 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 182,926,460 டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.