கைதி - 2 தொடர்பில் வெளியான தகவல்!

Wednesday, 26 May 2021 - 14:51

%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF+-+2++%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், தீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கைதி'.

இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவான இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றிக்கான செய்தியாளர் சந்திப்பில், 'கைதி 2' நிச்சயமாக உருவாகும் என கார்த்தியும் தெரிவித்திருந்தார்.

முதல் பாகத்தின் இறுதியிலிருந்து 2ஆம் பாகம் தொடங்கும் எனவும் நடிகர் கார்த்தி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அதற்குப் பிறகு 'கைதி 2' குறித்து எந்தவொரு தகவலுமே இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் 'கைதி 2' தொடர்பில் தயாரிப்பாளரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, நடிகர் 'கார்த்தி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவருமே ஒப்புக்கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக 'கைதி 2' உருவாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.