‘மிசன் இம்பொஸிபல் 7’ படத்தில் பிரபாஸ்? - இயக்குநர் விளக்கம்

Thursday, 27 May 2021 - 11:57

+%E2%80%98%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+7%E2%80%99+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%3F+-+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்த பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனையை படைத்தன.

தற்போது பொலிவூட், கொலிவூட் என முன்னணி நடிகராக வலம்வரும் பிரபாஸ், டொம் குரூஸின் ‘மிஷன் இம்பொஸிபல் 7’ படத்தில் நடிக்க உள்ளதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவிவந்தன.

நடிகர் பிரபாஸ் 'ராதே ஷ்யாம்' படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றபோது, ‘மிஷன் இம்பொசிபல் 7’ படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரி அவரை சந்தித்து கதை சொன்னதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இது குறித்து இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரியிடம் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வினவியிருந்தார்.

இதற்கு பதிலளித்த இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குவாரே, “பிரபாஸ் மிக திறமையான மனிதர் தான். ஆனால் நாங்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததே இல்லை” எனக் கூறியுள்ளார்.

இதன்மூலம் பிரபாஸின் ஹொலிவூட் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No description available.