'தளபதி 66' படத்தை இயக்கும் பிரபல தெலுங்கு இயக்குநர்!

Sunday, 30 May 2021 - 14:50

%27%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+66%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%21
இளைய தளபதி விஜய், மாஸ்டர் படத்துக்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகின்றார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஜோர்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது.கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்ததும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்துக்கு பின் விஜய் நடிக்கும் 66 ஆவது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடி பல்லி இயக்க இருப்பதாகவும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் இந்த படம் தயாராக உள்ளதாகவும் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், இயக்குநர் வம்சி பைடி பல்லி சமீபத்தில் நடந்த ஊடக சந்திப்பொன்றின் போது இதனை உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும், கொரோனா பரவல் குறைந்த பின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.

இயக்குநர் வம்சி ஏற்கனவே தமிழில் கார்த்தி நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளதுடன், தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த மகிரிஷி, ராம்சரண் நடித்த எவடு, ஜூனியர் என்.டி.ஆர் நடித்த பிருந்தாவனம், பிரபாஸின் முன்னா ஆகிய படங்களை இயக்கி தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகின்றார்.