தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி! (காணொளி- படங்கள்)

Monday, 31 May 2021 - 15:29

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திரைப்படத்தின் மூலம் நடிகை வரலட்சுமி சரத்குமார் கோலிவுட்டில் அறிமுகமானார்.

இவர் கதாநாயகியாக மட்டுமல்லாது வில்லி வேடங்களிலும் துணிச்சலாக நடித்து வருகிறார்.

இதனால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவருக்கு பட வாய்ப்புகள் வருகிறது.

தற்போது வரலட்சுமியின் கைவசம் காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை, ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் இருக்கின்றது.

இவ்வாறு பிசியான நடிகையாக வலம்வரும் வரலட்சுமி, தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில், சமூக வலைதள பக்கத்தில் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ள நடிகை வரலட்சுமி, ‘எனது மகனை அறிமுகம் செய்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

அவர் தனது நாய் குட்டியை தான் மகன் என குறிப்பிட்டுள்ளதுடன், ‘தி லயன் கிங்’ படத்தில் முபாசா தனது குழந்தை சிம்பாவை அறிமுகப்படுத்துவது போலவே வரலட்சுமியும் அந்த காணொளியில் தனது செல்ல நாய்க்குட்டியை அறிமுகம் செய்துள்ளார்.

இது தவிர அந்த நாய்க்குட்டிக்காக தனி இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் ஆரம்பித்துள்ளார்.


No description available.