‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ வைரலாகும் ஜகமே தந்திரம் ட்ரெய்லர்

Tuesday, 01 June 2021 - 12:13

%E2%80%98%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E2%80%99++%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D
பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் எதிர்வரும் 18 ஆம் திகதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் முன்னோட்டம் (ட்ரெய்லர்) வெளியிடப்பட்டுள்ளது.

அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அதில் தனுஷ் பேசும் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தனுஷ் இப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதால் அதிருப்தியில் இருந்த தனுஷ், இப்படம் குறித்த எந்தவித தகவலையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிராமல் இருந்து வந்தார்.

எனினும், தற்போது ஜகமே தந்திரம் ட்ரெய்லரை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.