யுவன் சொன்ன 'ஹாய்' சமூக வலைத்தளங்களில் வைரல்!

Tuesday, 01 June 2021 - 14:12

%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9+%27%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%27+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%21
நேற்று சர்வதேச புகையிலை ஒழிப்பு தினமாகும்.

இதனையொட்டி உலகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பான பதிவொன்றை இட்டுள்ளார்.

அந்த பதிவில் புகைப்பிடிப்பது உங்கள் வாழ்க்கையையே சுருக்கிவிடும் என யுவன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த யுவனின் ரசிகர் ஒருவர் நீங்கள் எனக்கு "ஹாய்" சொன்னால் நான் புகைப்பிடிப்பதனை விட்டுவிடுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

அதற்கு யுவனும் "ஹாய்" என பதிலளித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறதுடன் ரசிகரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தார் யுவன் என நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.