இலங்கைக்கு பெற்றோல் - டீசல் விநியோகிக்க பெற்றோச்சைனா இன்டெர்நெசனல் நிறுவனத்துக்கு அனுமதி!

Wednesday, 02 June 2021 - 8:41

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%21
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு டீசல் மற்றும் பெற்றோல் விநியோகம் செய்ய சிங்கப்பூரைத் தளமாக கொண்டு செயற்படும் பெற்றோச்சைனா இன்டெர்நெசனல் நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இதுதொடர்பான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் 8 மாதங்களுக்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இந்த நிறுவனம் இலங்கைக்கு 2.24 மில்லியன் பீப்பாய் டீசலையும், 1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலையும் விநியோகிக்கவுள்ளது.