அவுஸ்திரேலியாவிலும் அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு

Friday, 04 June 2021 - 13:33

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81
இந்தியாவில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட டெல்டா வைரஸ் திரிபு, முதன்முறையாக அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அங்கு இரண்டு பேர் இந்த வைரஸ் திரிபுடன் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைரஸ் இந்தியாவில் பெருமளவில் பரவி இருப்பதுடன், பிரித்தானியா போன்ற நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் வேறு இடங்களிலும் பரவியுள்ளதா? என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக விக்டோரியா மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.