நடமாட்ட கட்டுப்பாடுகளால் பழுதடையும் நிலையில் உள்ள பழங்கள்!

Friday, 04 June 2021 - 16:49

%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
நாட்டில் தற்போது அமுலாகியுள்ள நடமாட்ட கட்டுப்பாடுகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் பல இலட்சம் கிலோ கிராம் பழங்கள் பழுதடையும் நிலையில் உள்ளன.

இதனால் விவசாயிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

வாழை, பப்பாசி, திராட்சை உள்ளிட்ட பழங்கள் அறுவடை செய்யும் காலப்பகுதிக்கு வந்துள்ள நிலையில் அவற்றை கொள்வனவு செய்ய எவரும் பிரவேசிப்பதில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் பழங்களை வர்த்தக நிலையங்களுக்கு கொண்டு செல்வதிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனால் பழங்கள் பழுதடையக்கூடும் என விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எனவே பழங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு கிளிநொச்சி மாவட்ட பழ விவசாயிகள், உரிய அதிகாரிகளிடம் கோரியுள்ளனர்.