சிம்புவின் ‘பத்து தல’ படத்துக்கான இசையமைப்புப் பணிகளை ஆரம்பித்தார் ஏ.ஆர். ரஹ்மான்!

Friday, 04 June 2021 - 17:51

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E2%80%98%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%B2%E2%80%99+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%21

2017 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெற்றிபெற்ற முஃப்தி படம் பத்து தல என்ற பெயரில் தமிழில் உருவாகிவருகிறது.

'சில்லுனு ஒரு காதல்' பட இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும், இப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

அத்துடன், பிரியா பவானி சங்கர் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இப்படத்தில் சிம்பு, தாதா வேடத்தில் நடிக்கவுள்ளார். கொவிட் பரவல் நிலைமை சுமுகமடைந்த பிறகு படப்பிடிப்புகள் இடம்பெறும் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போது இப்படத்துக்கான இசையமைப்பு பணிகளை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.