ட்ரம்பின் சமூகவலைத்தள கணக்குகள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இரத்து

Saturday, 05 June 2021 - 9:14

%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் தலைநகரில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவுகளை அடுத்து அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் காலவரையின்றி இரத்து செய்யப்பட்டன.

டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைத்தளங்களின் விதிகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியுற்றமையை அடுத்து தலைநகரில் வன்முறைகள் இடம்பெற்றன.

வன்முறைகளை தூண்டும் வகையில் அவர் பதிவுகளை இட்டதாக தெரிவித்து அவரது பேஸ்புக் கணக்கு கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் திகதி முதல் காலவரையின்றி இரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவரது கணக்கு 2 ஆண்டுகளுக்கு இரத்து செய்யப்படுவதாக பேஸ்புக் நிறுவனம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அத்துடன் இரண்டு ஆண்டுகளின் பின்னர் எந்த பிரச்சனைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே அவரது கணக்குகள் மீள அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தமக்கு வாக்களித்த மக்களுக்கு அவமரியாதை அளிக்கும் வகையில் இந்த செயற்பாடு உள்ளதென அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.