பிரையன்னா மெக்னீலுக்கு ஐந்தாண்டு தடை

Saturday, 05 June 2021 - 10:12

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88
ஒலிம்பிக்கில் 100 மீற்றர் தடை தாண்டல் போட்டியில் சாம்பியனான பிரையன்னா மெக்னீலுக்கு ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்கமருந்து எதிர்ப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

29 வயதான அவர் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில் தம்மீது விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்துள்ளார்.

அடுத்த மாதம் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இது தொடர்பில் விசாரணை இடம்பெறும்.