கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து விலைச்சுட்டெண்ணில் 9.3 சதவீத வளர்ச்சி

Saturday, 05 June 2021 - 13:30

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+9.3+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
இந்த வருடத்தின் முதல் 5 மாத காலப்பகுதியில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து விலைச்சுட்டெண் 9.3 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

அத்துடன் எஸ்.என்.பி ஸ்ரீலங்கா 20 விலைச்சுட்டெண்ணும் 13 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த 5 மாத காலப்பகுதியில் பங்குச்சந்தையின் மொத்த புரள்வுகள் 414.5 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்த வளர்ச்சியாகும். 

கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வுகள் 396 பில்லியன் ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.