நாகேஷுடன் நடித்த ஏ.ஆர். முருகதாஸ் பல வருடங்களின் பின்னர் காணொளியை பகிர்ந்தார்

Saturday, 05 June 2021 - 17:43

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8F.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D.+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் நாகேஷுடன் நடித்த காட்சியொன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்கும் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார்.

எனினும், அவர் இயக்குநராவதற்கு முன்னதாகவே திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சியில் நடித்துள்ளார்.

அப்பாஸ் மற்றும் சிம்ரன் நடிப்பில்1997 ஆம் ஆண்டு வெளிவந்த ’பூச்சூடவா’ திரைப்படத்தை உதயசங்கர் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தில் நாகேஷ் மற்றும் சிம்ரன் தோன்றி நடித்துள்ள காட்சியொன்றில் சர்வராக தோன்றும் ஏ.ஆர்.முருகதாஸ், நாகேஷ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் காட்சியின் காணொளி ஒன்றையே இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

இந்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.