இந்தியாவில் பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் வீழ்ச்சி!

Sunday, 06 June 2021 - 13:22

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%21
கடந்த இரண்டு மாதங்களின் பின்னர் இந்தியாவில் குறைந்தளவிலான கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் நேற்று (05) பதிவாகியுள்ளனர்.

இன்று (06) காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 140,000 கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இந்தியாவில் இதுவரை கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு கோடியே 88 இலட்சமாக அதிகரித்துள்ளது.

கொவிட்-19 காரணமாக இந்தியாவில் நேற்றைய தினம் 2,667 கொவிட்-19 மரணங்கள் பதிவாகின.

இதற்கமைய, அங்கு இதுவரை மரணித்தோரின் எண்ணிக்கை 346,000 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், கொவிட்-19 தொற்றிலிருந்து 189,000 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை, அங்கு 1,477,000 பேர் குணமடைந்துள்ளனர்.