இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானம்!

Sunday, 06 June 2021 - 13:28

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
16 அணிகள் பங்கேற்கும் 7-வது இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர்  இந்தியாவில் ஒக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
 
எனினும் கொவிட்-19 இரண்டாவது அலை காரணமாக இந்த போட்டி இந்தியாவில் நடத்துவதில் இழுபறி நீடித்து வருகிறது.
 
இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மாற்று இடமாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
 
கொரோனா பரவல் சூழ்நிலையை ஆய்வு செய்து அதற்கு ஏற்றப்படி இருபதுக்கு 20 ஓவர் உலக கிண்ண தொடரை நடத்தும் முடிவை எடுக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சபை விடுத்த வேண்டுகோளை சர்வதேச கிரிக்கெட் பேரவை அண்மையில் ஏற்றுக்கொண்டது.
 
இதன்படி இந்தியாவில் இந்த போட்டியை நடத்த முடியுமா? என்பது குறித்து பரிசீலனை செய்து முடிவை எதிர்வரும் 28ஆம் திகதிக்குள் அறிவிக்க இந்திய கிரிக்கெட் சபைக்கு காலக்கெடு வழங்கப்பட்டிருந்தது.
 
இதற்கிடையில் கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை ஆரம்பிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
அத்துடன் ஓமான் தலைநகர் மஸ்கட்டில் தொடக்க சுற்று ஆட்டங்களை நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.