வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு : 11 பேர் பலி

Sunday, 06 June 2021 - 20:30

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%3A+11+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
வடக்கு ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 11 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கட்டாரில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுடன் தலிபான் அமைப்பின் தலைவர்கள், ஆப்கானிஸ்தான் தொடர்பான சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த குண்டு வெடிப்பிற்கு தலிபான் அமைப்பே காரணம் என ஆப்கானிஸ்தான் அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாத காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 1800 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.