பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரொஜர் பெடரர் 4 ஆவது சுற்றுக்கு தகுதி

Sunday, 06 June 2021 - 22:40

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+4+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF
பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டியில் ரொஜர் பெடரர் 4 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் பெரிஸ் நகரில் பிரெஞ் பகிரங்க டென்னிஸ் தொடர் இடம்பெற்று வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் போட்டி ஒன்றில் சுவிட்சர்லாந்து நாட்டின் வீரர் ரொஜர் பெடரர் மற்றும் உலக தர வரிசையில் 59 ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் டொமினிக் கொப்ஃபர் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில், முதல் செட்டை பெடரர் 7 இற்கு 6 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.

எனினும் அடுத்த செட்டை 6 இற்கு 7 என்ற செட் கணக்கில் டொமினிக் வெற்றிப்பெற்றார். பின்னர் 3 ஆவது செட்டை 7 இற்கு 6 என்ற புள்ளி செட் கணக்கில் ரொஜர் பெடரர் கைப்பற்றினார்.

அதன்பின்னர் 4 ஆவது செட்டில் 7 இற்கு 5 என்ற செட் கணக்கில் வெற்றி டொமினிக்கை வீழ்த்தி ரொஜர் பெடரர் 4 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.