தாயின் பெயரை தமது பிள்ளைக்கு சூட்டிய இளவரசர் ஹரி!

Monday, 07 June 2021 - 9:40

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%21
பிரித்தானிய அரச குடும்பத்தின் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லிலிபெட் லிலி டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்ஸர் ( Lilibet  “Lili” Diana Mountbatten-Windsor)  என பெயர் சூட்டியுள்ளனர்.

பக்கிங்ஹெம் (Buckingham) மாளிகை இதனை அறிவித்துள்ளது.

இந்த தகவல் பிரித்தானிய மகாராணியார், வேல்ஸ் இளவரசர், கோர்ன்வெல் சீமாட்டி மற்றும் கேம்பிரிஜ் சீமான் சீமாட்டி ஆகியோருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழந்தைக்கு இளவரசர் ஹரி, மறைந்த தனது தாயார் டயானாவின் பெயரை சூட்டியுள்ளார்.

அத்துடன் லிலிபெட் என்பது மகாராணியின் செல்லப்பெயரென்பது குறிப்பிடத்தக்கது.