இலங்கை முதலீட்டு மாநாடு ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்!

Monday, 07 June 2021 - 9:12

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%21
2021 இலங்கை முதலீட்டு மாநாடு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

மெய்நிகர் மாநாடாக நடைபெறும் இந்த 3 நாள் மாநாட்டில்  உள்நாட்டு, வெளிநாடு பிரதிநிதிகள் என 3, 500க்கும் அதிகமானோர்  கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபை, வர்த்தக சம்மேளனம் மற்றும் கொழும்பு பங்குபரிவர்தனை நிலையம் என்பவற்றின் ஏற்பாட்டில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து கொள்ளும் நோக்கில் சுமார் 65 நாடுகளின் பங்குப்பற்றலுடன் இணைய வழியில் நடத்தப்படும் ஆசியாவின் முதலாவதும், விசாலமானதுமான முதலீட்டு மாநாடு இதுவாகும்.