பாகிஸ்தானில் இரு தொடருந்துகள் மோதி விபத்து: 30 பேர் உயிரிழப்பு!

Monday, 07 June 2021 - 9:32

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+30+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
தெற்கு பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தின் தார்கி நகரில் இரண்டு தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இன்று காலை இடம்பெற்ற இந்த கோரவிபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லாகூர் மற்றும் சர்கோதாவிலிருந்து கராச்சி நோக்கிச் செல்லும் இரண்டு தொடருந்துகளே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.

விபத்தில் 14 பெட்டிகள் தடம் புரண்ட அதேவேளை, அவற்றில் 8 பெட்டிகள் பலத்த சேதமடைந்துள்ளன என பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.