11 இலட்சம் ஹெக்டயர் விவசாய நிலத்திற்கு தேவையான சேதன பசளையை இறக்குமதி செய்ய நடவடிக்கை

Monday, 07 June 2021 - 13:17

+11+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B9%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
விவசாய உற்பத்திகளுக்காக சேதன பசளையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 11 இலட்சம் ஹெக்டயர் விவசாய நிலத்திற்கு போதுமான சேதன பசளையை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது அடுத்த பெரும்போகத்திற்காக 5 இலட்சம் ஹெக்டயர் நெற் பயிர்ச்செய்கை மற்றும் 6 இலட்சம் ஹெக்டயரில் மேற்கொள்ளப்படவுள்ள ஏனைய பயிர்ச்செய்கைக்கு தேவையான சேதன பசளையை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச ரீதியில் முன்பதிவுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

இதற்காக அரச உர நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சேதன பசளை விவசாய சேவை திணைக்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளது.

அந்தந்த போகங்களுக்கு அமைய ஆய்வு நிறுவனத்தின் ஊடாக பரிந்துரைக்கப்படும் சேதன பசளைகளே, இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளது.