இங்கிலாந்து செல்ல இலங்கை அணி வீரர்கள் இணக்கம்!

Monday, 07 June 2021 - 15:52

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் பங்கேற்பதற்கும், அதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவும் இலங்கை கிரிக்கெட் அணிவீரர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வருடாந்த போட்டி ஒப்பந்தம் தொடர்பான பிரச்சினைக்கு இன்னும் தீர்வுகாணப்படாத நிலையில் இங்கிலாந்து தொடரின் பின்னர் அது குறித்த தீர்மானம் எடுக்கப்பதாக மேற்படி பேச்சுவார்த்தையின்போது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.