சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் கைதான நடிகருக்கு ஆதரவளிக்கும் யாஷிகா

Monday, 07 June 2021 - 18:32

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE
இந்தி சின்னத்திரை நடிகர் பியர்ல் வி புரி,5 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதானார்.

இந்த தகவல் சினி வட்டாரங்களில் மிக பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர் மீது கடும் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூகவலைத்தளத்தில் பலர் ஆதங்கத்தை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் சில நடிகைகள் பியர்ல் வி புரி கைதானதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், பியர்ல் வி புரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் , ‘பியர்ல் வி புரி மிகவும் அமைதியாக பேசக்கூடியவர். எனக்கு தெரிந்த அன்பானவர்களில் அவரும் ஒருவர். உண்மை தெரியும் வரை பொறுத்திருப்போம். நான் பியர்ல் வி புரிக்கு ஆதரவு அளிக்கிறேன். எனது நண்பர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று கூறியுள்ளார்.