'பிரேமம்' மலர் டீச்சராக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை!

Tuesday, 08 June 2021 - 11:24

%27%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%27++%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%21
‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.

அதை தொடர்ந்து 'பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான 'பிரேமம்' திரைப்படம், தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.

நிவின் பாலியின் மூன்று பரிணாமங்கள் குறித்து காட்டப்பட்ட 'பிரேமம்' படத்தில், மலர் டீச்சராக நடித்திருந்த சாய் பல்லவியின் கதாபாத்திரம் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டது.

'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.

இந்நிலையில், சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடிய இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனிடம், அவரின் மலையாள படங்களில் தமிழின் தாக்கம் இருப்பது பற்றி ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அவர் “முதலில் நான் பிரேமம் கதை எழுதிய போது மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் அசினை நடிக்க வைக்க விரும்பினேன். அந்தக் கதையும் மலையாளத்தில் தான் இருந்தது. ஃபோர்ட் கொச்சியை சேர்ந்தவராக அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்து இருந்தேன்.

பின்னர் அசினை தொடர்பு கொள்ள முடியாத காரணத்தால், மலர் டீச்சர் கதாபாத்திரத்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராக மாற்றி எழுதினேன். நான் சிறு வயதில் ஊட்டியில் படித்தேன் பின்னர் கல்லூரி படிப்பை சென்னையில் படித்தேன். அதனால் தான் எனது படத்தில் தமிழின் தாக்கம் அதிகமாக இருக்கிறது” என விளக்கம் அளித்துள்ளார்.

No description available.