ஜோகோவிச் பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் கால் இறுதி போட்டிக்கு முன்னேறினார்!

Tuesday, 08 June 2021 - 13:18

%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%21
பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச், காலிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இத்தாலியின் லோரென்ஜோ முசெட்டியோவுடன் நேற்று (07) நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில் வெற்றிப்பெற்றதன் மூலம் அவர் இவ்வாறு காலிறுதிக்கு முன்னெறியுள்ளார்.

இந்த போட்டியில் முதல் இரண்டு செட்களையும் 6 இற்கு 7, 6 இற்கு 7 என்ற கணக்கில் லோரென்ஜோ முசெட்டியோ கைப்பற்றினார்.

எனினும், அடுத்த இரண்டு செட்களையும் 6 இற்கு 1, 6 இற்கு 0 என்ற கணக்கில் ஜோகோவிச் தனதாக்கினார்.

இறுதி செட்டில் ஜோகோவிச் 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது லோரென்ஜோ முசெட்டி காயம் ஏற்பட்டதால் விலகினார்.

இதனால், ஜோகோவிச் வெற்றி பெற்று தொடர்ச்சியாக 12-வது முறையாக பிரெஞ்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் கால் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.