சிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதைத் தவிர்க்க விரும்பும் முஷ்ஃபிகுர் ரஹீம்!

Tuesday, 08 June 2021 - 21:48

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%21
அடுத்த மாதம் சிம்பாப்வே அணிக்கு எதிரான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதைத் தவிர்க்க விரும்புவதாக பங்களாதேஷ் அணியின் வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் அறிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணியின் தேர்வு குழுவிற்கு அவர் இதனை அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அவரது கோரிக்கையை பங்களாதேஷ் கிரிக்கட் சபை இதுவரை அங்கீகரிக்கவில்லை என கூறப்படுகிறது.

உயிர் குமிழி பாதுகாப்பு முறையில் போட்டிகளில் பங்கேற்கும் போது வீரர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் காரணமாக அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

மூன்று வடிவங்களிலான போட்டிளில் விளையாடும் முஷ்ஃபிகுர் ரஹீம், காயங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக ஓய்வு கேட்பது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஆண்டு இடம்பெற்ற பாகிஸ்தான் சுற்றுப்பயணங்களில் இருந்து அவர் விலகியிருந்தார்.