இந்தியாவில் கொவிட் தடுப்பூசிகளுக்கு விலை நிர்ணயம்!

Wednesday, 09 June 2021 - 12:36

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
இந்தியாவில், தனியார் வைத்தியசாலைகள், கொவிட்-19 தடுப்பூசிக்காக அறவிடக்கூடிய உச்சபட்ச விலைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன்படி, கொவிஷீல்ட் ஒரு மாத்திரைக்கு 780 இந்திய ரூபாவும், ஸ்புட்னிக் V ஒரு மாத்திரைக்கு 1,145 இந்திய ரூபாவும், கொவெக்ஸின் ஒரு மாத்திரைக்கு 1,410 இந்திய ரூபாவும் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரிகளும், வைத்தியசாலைகளின் சேவைக் கட்டணமான 150 இந்திய ரூபாவும், இதில் அடங்கும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தனியார் வைத்தியசாலைகளின் சேவைக் கட்டணத்தை 150 ரூபாவை விடவும் அதிகரிக்க இடமளிக்க வேண்டாம் என மாநில அரசாங்கங்களுக்கு மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.