சீதையாக நடிக்க 12 கோடி ரூபா சம்பளம் கேட்கும் பிரபல பொலிவூட் நடிகை!

Wednesday, 09 June 2021 - 15:11

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+12+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%21
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன.

மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார்.

தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது.

இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர்.

இப்படம் 500 கோடி ரூபா செலவில் தயாராகிறது.

அத்துடன், இந்த படத்தை தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியிலும் இராமாயண கதையை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது.

சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பொலிவூட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்த அவர், அப்படத்தில் நடிக்க 12 கோடி ரூபா சம்பளம் கேட்டுள்ளார்.

வழக்கமாக ஒரு படத்துக்கு 6 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்கும் அவர், இப்படத்திற்காக சுமார் ஒரு வருடம் கோல்ஷீட் தர வேண்டி இருப்பதால் 12 கோடி ரூபா கேட்டுள்ளார்.

அதனால் படக்குழுவினர், அவர் கேட்ட தொகையை கொடுத்து ஒப்பந்தம் செய்வார்களா? அல்லது வேறு நடிகையை நடிக்க வைப்பார்களா? என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

No description available.