ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து தென்னாபிரிக்கப் பெண் உலக சாதனை!

Wednesday, 09 June 2021 - 17:22

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+10+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%21+
தென்னாப்பிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணான கோசியம் தாமாரா சித்தோல் (37) பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இந்த குழந்தைகளைப் பெற்றார்.

இந்த பிரசவத்தில் ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளன.

தனது கர்ப்பம் இயற்கையானது என்றும், தான் கருவுறுதல் சிகிச்சை மூலம் குழந்தை பெறவில்லை என்றும்  சித்தோல், கூறியுள்ளார்.

இதேவேளை, ஹலிமா சிஸ்ஸே (25) என்ற பெண் கடந்த மாதம் மாலியில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.