அமெரிக்கா மீள் திரும்பிவிட்டதாக ஜோ பைடன் அறிவிப்பு!

Thursday, 10 June 2021 - 7:53

++%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%21
உலக நாடுகளுக்கு நிவாரணமாக வழங்குவதற்காக 500 மில்லியன் பைஸர் கொவிட் 19 தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை அமெரிக்கா ஆரம்பிக்கவுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு 200 மில்லியன் தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு அமெரிக்காவினால் விநியோகிக்கப்படவுள்ளன.

எஞ்சிய தொகை 2022 ஆம் ஆண்டில் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜோ பைடன் தற்போது பிரித்தானியா சென்றுள்ளார்.

அங்குள்ள அமெரிக்க துருப்பினரை சந்தித்து உரையாற்றிய அவர், அமெரிக்கா தற்போது மீள்திரும்பிவிட்டதாக அறிவித்துள்ளார்.