இலங்கை- எத்தியோப்பியாவுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த விசேட கலந்துரையாடல்!

Thursday, 10 June 2021 - 8:00

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-+%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%21

இலங்கை மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருநாட்டு வெளி விவகார அமைச்சுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் தொலை காணொளி ஊடாக நேற்று (09) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு மொத்தமாக 37 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான வர்த்தகம் இருநாடுகளுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளதாக இதன் போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் 3 ஆடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஒரு இரசாயன உற்பத்தி நிறுவனம் ஆகியன எத்தியோப்பியாவில் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மேல் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


????????|???????? Sri Lanka and Ethiopia discuss enhancement of political and economic ties at first ever bilateral consultations.

Full Media Release at : https://t.co/Is0VaPfov8#SriLanka #Ethiopia #Africa #Trade #SDGs #DiplomacyLk@mfaethiopia @SLinEthiopia pic.twitter.com/ZIFtlbweJz

— MFA SL ???????? (@MFA_SriLanka) June 10, 2021