இந்தியாவில் அதிகரித்துவரும் கொவிட் உயிரிழப்புக்கள்

Thursday, 10 June 2021 - 13:03

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்தியாவில் நாளாந்தம் பதிவாகும் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றபோதிலும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருவதாக இந்திய சுகாதாரத் துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நேற்றைய தினம் 93,896 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 6,138 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்படி இந்தியாவில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,182,000 கடந்துள்ளது.

அங்கு இதுவரை 359,695 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.