உரத்தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நுவரெலியா மாவட்ட மரக்கறி உற்பத்தியாளர்கள்

Friday, 11 June 2021 - 9:02

%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இரசாயன உரப்பாவனையை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து உரங்களின் பற்றாக்குறையால் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக நுவரெலியா மாவட்ட மரக்கறி உற்பத்தியாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியான மழைக்காரணமாக ஏற்கனவே எதிர்பார்த்த உற்பத்திகளை பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள் தற்போது உரங்களின் தட்டுப்பாட்டால் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தின் இந்த திடீர் அறிவிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு உற்பத்திகளை செவ்வனே முன்னெடுத்துச் செல்ல உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.