5000 ரூபா நிவாரண கொடுப்பனவு கூட கிடைக்கவில்லை

Friday, 11 June 2021 - 8:47

5000+%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88
நடமாட்ட கட்டுப்பாடுகளால் தொழில்களை இழந்துள்ள மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரை கிடைக்கவில்லை என கொழும்பு - தெமட்டகொடை பகுதியில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதிவாழ் மக்கள் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் பெய்த கடும் மழையால் தமது வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்து பெரும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளோம். அதேநேரம் நடமாட்டத் தடை காரணமாக தொழில்களை இழந்துள்ளோம். இதனால் எமது வருமானம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு கூட கிடைக்கவில்லை என அப்பகுதிவாழ் மக்கள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர்.

எனவே பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழும் தமக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் தலையீடு செய்து உரிய கொடுப்பனவுகளை பெற்றுத்தருமாறு அப்பகுதிவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.