தெல்கொட வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு (படங்கள்)

Friday, 11 June 2021 - 10:45

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%28%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29
கம்பஹா, தெல்கொட - மீகாஹவத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

தெல்கொட - அலுபோவில பிரதான வீதியில் தெல்கொட நோக்கி பயணித்த உந்துருளி ஒன்றும்  எதிர் திசையிலிருந்து வந்த மகிழுந்தும் நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றது.

நேற்று (10) இடம்பெற்ற இந்த வாகன விபத்தில் உந்துருளியில் பயணித்த 30 வயதுடைய ஆண் ஒருவரும், 42 வயதான பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மொரகல மற்றும் தம்புள்ள ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து மகிழுந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.