சஜித் பிரேமதாச தம்பதியினர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்!

Friday, 11 June 2021 - 11:03

%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%21
கொவிட் தொற்றுக்குள்ளான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஆகியோர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.

இவர்கள் கடந்த மே 23 ஆம் திகதியன்று கொவிட் தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இருவரும் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியதையடுத்து கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதோடு மகா சங்கத்தினரிடம் ஆசி பெற்றனர்.

இதன்போது, எதிர்க்கட்சித் தலைவருக்கு நல்ல ஆரோக்கியத்துடன் தனது எதிர்கால முயற்சிகளுக்காக தமது வாழ்த்துகளை தெரிவித்த மகா சங்கத்தினர் ஆசிர்வாதங்களையும் வழங்கினர்.