சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த சந்தேகநபர் கைது! (காணொளி)

Friday, 11 June 2021 - 10:55

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29

சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவந்த, சிறுவன் ஒருவன் மதுபானம் அருந்துவது போன்ற காணாளி தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதற்கமைய, சிறுவனுக்கு மது அருந்தக் கொடுத்து, அக்காட்சியை ஒளிப்பதிவு செய்ததாக கருதப்படும் நபர் பேலியகொடை சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர், பேலியகொடை, நுகே வீதியை சேர்ந்த 25 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் சிறுவனின் வீட்டுக்கு அருகில் வசிப்பவராவார்.

சிறுவனின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றமையினால், குறித்த சிறுவன் தனது தாய் மற்றும் தாயின் பெற்றோர் ஆகியோருடன் வசித்துவந்துள்ளான் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.