கடன் சலுகை வழங்காத வங்கிகள், நிதிநிறுவனங்கள் குறித்து முறையிட விசேட இலக்கம்!

Friday, 11 June 2021 - 13:17

%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%21
கொவிட்-19 மூன்றாவது அலையையடுத்து, அரசாங்கம் வழங்கிய ஆலோசனைக்கமைய,  வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகை வழங்காவிட்டால், அது குறித்த முறைப்பாடுகளை அளிக்க இலங்கை மத்திய வங்கி விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, 011 - 24 77 966 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.