மொரட்டுவ நகர முதல்வருக்கு பிணை

Friday, 11 June 2021 - 12:37

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88
மொரட்டுவ நகர முதல்வர் சமன்லால் பெர்ணான்டோ பிணையில் செல்வதற்கு மொரட்டுவ நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின்போது வைத்திய அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இவர் கல்கிசை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மொரட்டுவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து இன்றுவரை (11) அவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணை வழங்கப்பட்டது.