நேரடியாக ஓடிடி-யில் வெளியாகும் பிரபுதேவாவின் ஆக்‌ஷன் படம்?

Friday, 11 June 2021 - 14:55

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%3F
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படமொன்று, விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக இந்திய சினிமாதுறையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் ஏ.சி.முகில் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படமான  ‘பொன் மாணிக்கவேல்’ படமானது பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ளது.

இதில் பிரபுதேவா முதல்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி, மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ள இப்படம், விரைவில் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கேஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி உள்ளது. சமீபத்தில் பிரபுதேவா இயக்கத்தில் உருவான ராதே எனும் இந்தி படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.