விக்டோரியா நீர்த்தேக்கத்தினுள் வீழ்ந்து பாரவூர்தி விபத்து: சாரதி பலி - 1,600 கோழிகளும் உயிரிழப்பு

Friday, 11 June 2021 - 19:06

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+-+1%2C600+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
1,600 கோழிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று, மஹியங்கனை - கண்டி பிரதான வீதியில் மொரகஹமுல, கல்ஓய பாலத்துக்கு அருகில் விக்டோரியா நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி பலியானதுடன், அதில் ஏற்றிச்செல்லப்பட்ட 1,600 கோழிகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பிபிலை பிரதேசத்திலிருந்து கண்டி, கம்பளை பிரதேசத்தை நோக்கி பயணித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த சாரதி, கட்டுகிதுல, மீகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த அஷேன் தனுஷ்க என்பவரே உயிரிழந்தவராவார்.

இந்த பாரவூர்தி கல்ஓய பாலத்துக்கு அருகில் இருந்த தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு நீர்த்தேக்கத்துக்குள் வீழ்ந்துள்ளதாகவும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.